2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

சம்பியனானது ஓலைத்தொடுவாய் சென் தோமஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழாவை முன்னிட்டு மன்னார் மறைசாட்சிகள் சமூக நல அமைப்பின் ஏற்பாட்டில், மன்னார் தோட்டவெளி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த 13 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இந்நிலையில், ஓலைத்தொடுவாய் சென்தோமஸ் அணியும் துள்ளுகுடியிருப்பு சென் மேரிஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவானது. இறுதிப் போட்டியானது ஐந்து சுற்றுக்களை கொண்டமைந்திருந்த நிலையில், முதல் மூன்று சுற்றுக்களையும் வரிசையாக கைப்பற்றிய ஓலைத்தொடுவாய் சென் தோமஸ் அணி, மூன்றாவது சுற்றிலேயே வெற்றியை தமாதாக்கி சம்பியனாகியது.

இப்போட்டிகளின் போது பிரதான நடுவராக அகில இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன உறுப்பினரும் மத்தியஸ்தருமான பாலித பெரேரா, துணை நடுவராக  நிஜாம், மன்னார் மாவட்ட கரப்பந்தாட்ட தேசிய நடுவரும் உடற்கல்வி ஆசிரியருமான ஒகஸ்ரின் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .