2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சம்பியனானது கிளிநொச்சி உருத்திரபுரம் வி.க

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

மறைந்த கோரக்கன்கட்டு மக்கள் மற்றும் மறைந்த கழக அங்கத்தவர்களின் ஞாபகார்த்தமாக முரசுமோட்டை கோரக்கன்கட்டு விளைபூமி விளையாட்டுக் கழகம் நடத்திய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

கோரக்கன்கட்டு விளைபூமி விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக் கழகமும் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகமும் மோதின.

இதில், உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. வெற்றியீட்டிய அணி, சிறந்த வீரர்களுக்கான பரிசில்களையும், வெற்றிக் கேடயங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வழங்கினார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில், விளையாட்டுக்கள் மூலம் எமது இளைய தலைமுறை வழி தவறிச் சென்று தீய வழிகளைப் பின்பற்றுவதைத் தடுத்து ஆரோக்கியமான சமூகமாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்த முடியும். விளையாட்டுக்கள் ஒரு மனிதனை உடல், உள ரீதியாக ஆரோக்கியமடையச் செய்கின்றது.

ஆன்மீகமும் விளையாட்டும் இந்த நாட்டில் சரியான முறையில் பின்பற்றப்பட்டால், எமது நாட்டில்  இளைய தலைமுறையினர் வழிதவறிச் சென்று வாழ்க்கையை அழிக்கின்ற போதைவஸ்து மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு அடிமையாகமாட்டார்கள். எமது இனத் தனித்துவம், கலாசாரங்களைப் பேணுவதற்கும்  இப்படியான விளையாட்டுக்கள் துணைபுரிகின்றன’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .