2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சுப்பர் 8இல் மன்னார் சென். லூசியஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 15 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தமது மைதானத்தில் நடாத்தும் வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு இறுதி அணியாக மன்னார் சென். லூசியஸ் விளையாட்டுக் கழகம் நுழைந்துள்ளது.

சென். லூசியஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் இளவாலை யங்கென்றீசியன் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். லூசியஸ், இறுதி அணியாக சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இப்போட்டியின் 13ஆவது நிமிடத்தில் சென்.லூசியஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராங்கிளின் முதலாவது கோலினைப் பெற்று தனது அணிக்கு முன்னிலையை வழங்க, 31ஆவது நிமிடத்தில் அவ்வணியின் யூலி ஒரு கோலினைப் பெற்று 2-0 என்ற கோல் முன்னிலையை தனது அணிக்கு வழங்கினார்.

தொடர்ந்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் சென்.லூசியஸ் அணிக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டியை யங்கென்றீசியன் கோல்காப்பாளர் இலாவகமாக தடுக்க, தொடர்ந்த 79 ஆவது நிமிடத்தில் சென்.லூசியஸ் அணியின் அசோக் ஒரு கோலினைப் பெற்று, தனது அணிக்கு 3-0 என்ற கோல்கணக்கில் உறுதியான முன்னிலையை வழங்க, பல கோல் வாய்ப்புகளை தவறவிட்ட யங்கென்றீசியன் அணி, 84ஆவது நிமிடத்தில் செந்தூரன் மூலம் பெற்றுக் கொண்ட ஆறுதல் கோலுடன், இறுதியாக 1-3 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக சென்.லூசியஸ் அணி வீரர் அசோக் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கான பணப்பரிசு மற்றும் பதக்கத்தினை பிரதம குடிவரவு உத்தியோகத்தர் மற்றும் சட்டத்தரணியான சி.ஸ்ரீஸ்கந்தராசா வழங்கி கெளரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .