2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மட்டத்தில் காரைதீவு அணி

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லோ.சுலெக்ஸன்
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடாத்தப்படும் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்று காரைதீவு பிரதேச செயலக அணி, நேரடியாக தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளது.

பாண்டிருப்பில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட மட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டியில், காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட அணி, 39-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொத்துவில் பிரதேச செயலக அணியை வெற்றிகொண்டது.

இம்முறை தெரிவாகிய தடவையுடன், காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட அணி, தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X