Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 18 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
- குணசேகரன் சுரேன், எஸ். குகன்
யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 16ஆவது ஒருநாள் போட்டி, சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சென். ஜோன்ஸ் அணித்தலைவர் வசந்தன் யதுசன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் அணி, 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில், சூரியகுமார் சுஜன் 3, செல்வராசா மதுசன், கமலராசா இயலரசன், சிவலிங்கம் தசோபன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி, 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களையே பெற்று 66 ஓட்டங்களால் யாழ். மத்தி தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், கமலராசா இயலரசன் 25, செல்வராசா மதுசன் 24, சிவலிங்கம் தசோபன் 24, சிறிஸ்கந்தராசா கௌதமன் 24, அன்ரனிதாஸ் ஜெயதர்சன் 19 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நாகேந்திரராஜா சௌமியன் 3, தெய்வேந்திரம் டினோசன், முர்பின் அபிநாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக சென். ஜோன்ஸ் அணியின் முர்பின் அபிநாஸ் தெரிவானார்.
39 minute ago
44 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
44 minute ago
4 hours ago
6 hours ago