2021 மே 10, திங்கட்கிழமை

யாழ். மத்தியை வென்றது சென். ஜோன்ஸ்

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இருநூறாம் ஆண்டுப் பூர்த்திக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, யாழ். மத்திய கல்லூரிக்கும் அதன் போட்டிப் பாடசாலையான சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

இரு கல்லூரிகளினதும் ஆசிரியர்களுக்கிடையிலும் பழைய மாணவர்களுக்கு இடையிலும் என, இரண்டு போட்டிகள் இடம்பெற்றபோது, இரண்டு போட்டிகளிலுமே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

இரு கல்லூரியின் ஆசிரியர்களிடத்தே இடம்பெற்ற முதலாவது போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

அதன் பின்னர், பழைய மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியிலும் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் யாழ். மத்திய கல்லூரியை வென்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியஸ்தகரான வி.ரி சுந்தரலிங்கம் கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X