2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

லிவர்பூல் அணியை 01 கோலினால் வீழ்த்தி தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணி

Super User   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தி வரும் நியூ ஸ்டார்ஸ் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் 01 கோலினால் லிவர்பூல் அணியை வீழ்த்தி தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த  இரண்டாவது அரை இறுதிப்போட்டி புத்தளம் சாகிரா கல்லூரி மைதானத்தில் திங்கட்கிழமை (14)  இடம்பெற்றது. ஏற்கனவே புத்தளம் லீக்கினால் நடாத்தப்பட்ட தொடர்  ஒன்றில் இறுதிப்போட்டிக்காக காத்திருக்கும் லிவர்பூல் அணியும், தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணியும் இந்த புதிய தொடரில் அரை இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடாத்தின.

 இடைவேளைக்கு முன்பு  தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணியின் முன்கள வீரர் எம்.சல்மான் தமது  அணிக்கான முதலாவது கோலை செலுத்தினார். போட்டி முடியும் வரை இரு பக்கத்திலும் அதிரடியான ஆட்டம் நிறைந்திருந்த போதும்  கோள்கள் எதுவும் செலுத்தப்படவில்லை.

லிவர் பூல் அணிக்கு கிடைக்கப்பெற்ற 15 க்கும் மேற்பட்ட கோனர் உதைகளை அவ்வணியினர் தவற விட்டமை தோல்விக்கு காரணமாக அமைந்தது.  எனினும் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணி  இறுதி வேளையில் கோல் போடுவதை விடுத்து  தற்காப்பிலேயே கவனம் செலுத்தினர். போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ.எம்.கியாஸ், எம்.எஸ்.எம்.நௌபி, ஏ.எம்.பஸ்ரின் ஆகியோர் கடமையாற்றினர்

இத்தொடரின் இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை (18) புத்தளம் சாகிறா கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. நியூ பிரண்ட்ஸ் அணியுடன்  புத்தளம் விம்பிள்டன் அணி எதிர்த்தாட உள்ளது. தொடரின் அனுசரணை  அணியான நியூ ஸ்டார்ஸ் கழகத்தின்  மூத்த வீரர்கள், நிர்வாகிகள்  இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக. புத்தளம் கால்பந்தாட்ட லீக் செயலாளரும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன பொருளாளருமான ஜே.எம்.ஜௌசி தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--