2021 ஜனவரி 20, புதன்கிழமை

13 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால்; நாடாளவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஏழு பாடசாலை அணிகள் பங்குகொள்கின்றன.

இதனடிப்படையில், திருகோணமலை இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் பதவிய மகா வித்தியாலயத்திற்குமான போட்டி நேற்று வியாழக்கிழமை காலை ஸ்ரீP கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பதவிய மகா வித்தியாலயம் தமது முதல் இன்னிங்சில் 22.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணி 17.3 ஓவர்களில் சகல  விக்கெட்டுக்களையும் இழந்து 34 ஓட்டங்களை மாத்தரம் பெற்றுக்கொண்டனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய பதவிய மகா வித்தியாலயம் 26.1 ஓவர்களில்; 8 விக்கெட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இப்போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 23 பரிமாற்றங்களுக்கு 90 என்ற இலக்குடன் களம் இறங்கியது.

இதில் 22.2 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 92 ஒட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

  Comments - 0

  • H.RISHIKEITHTHANAN Friday, 25 January 2013 02:00 PM

    சிங்ககூட்டதின் ஆட்டம் தொடங்கிட்டு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .