Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
உடுவில் கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையேயான 13 வயதுப் பிரிவினர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஏழாலை மகா வித்தியாலய மைதானாத்தில் இடம்பெறவுள்ளன.
லீக் முறையில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் ஏழு பாடசாலை அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடவுள்ளன. போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள பாடசாலை அணிகளின் விபரங்கள் வருமாறு:
ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயம், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, குப்பிளான் விக்கினேஸ்வரா விதியாலயம், சுன்னாகம் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாலயம், சுன்னாகம் மயிலணி சைவமகா வித்தியாலயம், இணுவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
12 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
27 minute ago
38 minute ago