2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

200 மீற்றர் ஓட்ட போட்டியில் ஒலுவில் ரஜாஸ்கான் முதலிடம்

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

90 ஆவது தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் ஏ.ஆர்.எம். ரஜாஸ்கான் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்த போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றன. இதில் 200 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவத்தின் சார்பில் பங்குபற்றிய ரஜாஸ்கான் 21.29 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பெற்றார்.

இப்போட்டியில் இலங்கை பொலிஸ் அணியை  சேர்ந்த எச்.எஸ்.பத்திரண 21.39 வினாடிகளில் ஓடி இரண்டாமிடத்தையும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஐ.எம்.ஆர். புஸ்பகுமார 21.45 வினாடிகளில் ஒடி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
இவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஒலுவில் கிராமத்தைச் சேர்ந்த என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .