Super User / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 40 வருட நிறைவைக்கொண்டாடும் முகமாக யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளைப் பிரதேச செயலக அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும் கோப்பாய் பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன.
மூன்று சுற்றுக்கள் கொண்ட இந்தப் போட்டியில் முதல் இரண்டு நேர் சுற்றுக்களை தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 25 :111, 25 : 15 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றதுடன் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளது.


15 May 2026
15 May 2026
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 May 2026
15 May 2026
15 May 2026