Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் கல்வி அமைச்சு நடத்திய சதுரங்கப் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
நீர்கொழும்பு லோயலா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்ட ஏ.எச்.றிப்கி றிகாஸ் என்ற மாணவனே இவ்வாறு இரண்டாம் இடம் பெற்றவராகும்.
கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக இவ்வருடம் அறிமுகம் செய்யப்பட்ட சதுரங்க விளையாட்டில் இம்மாணவன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டியில் வித்தியாதா கல்லூரி மாணவன் கே.ஏ.பி.எம்.ஆரியவசம் முதலாம் இடத்தையும் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாணவன் ஆர்.திருபரன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கான சதுரங்க பயிற்சிகளை கல்லூரி ஆசிரியர்களான எம்.ஏ.சலாம் மற்றும் அலியார் ஏ பைஸர் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
16 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago