Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
கடந்த பல வருடகால இடைவெளியின் பின்னர் வட மாகாணத்திற்கான விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் முகமாக விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளார்கள்.
வட மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக வட மாகாணத்திற்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமனம் செய்வதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த திங்கட்கிழமை 27ஆம் திகதி திருகோணமலையில் உள்ள விளையாட்டுத் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நேர்முகப் பரீட்சையில் வட மாகாணத்தைச் சேர்ந்த விளையாட்டு அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். குறிப்பாக கரப்பந்தாட்டம் மெய்வன்மை, வலைப்பந்தாட்டம், கிரிக்கெட், கால்பந்தாட்டம், கபடி ஆகிய விளையாட்டுக்களுக்கான பயிற்றுவிப்பாளர்கள் முதல் கட்டமாக தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.
இந்த நேர்முகப் பரீட்சைக்குச் சென்றவர்களில் பெரும்பான்மையான விளையாட்டு அலுவர்கள் ஒரே காலத்தில் நியமனம் பெற்றவாகள் என்பதினால் பயிற்றுவிப்பாளர்கள் நியமனத்தில் கடுமையான போட்டி காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago