2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தேசிய இளைஞர் விளையாட்டு விழா; நாவலப்பிட்டியவில் சைக்கிள் ஓட்டப்போட்டி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுவர்ணஸ்ரீ)

நாவலப்பிட்டியவில் இடம்பெறவுள்ள 22ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு ஆண் பெண் இருபாலாருக்கான சைக்கிள்  ஓட்டப்போட்டிகள் இன்று 8ஆம் திகதி இடம்பெற்றன. இந்தப்போட்டிகளை இளைஞர் விவகார பிரதியமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஆரம்பித்து  வைத்தார்.

ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி நாவலப்பிட்டிய பொது வைத்தியசாலை முன்றலில் ஆரம்பமாகி கம்பளை, பேராததெனிய, கண்ணுருவ, கெட்டப்பே, கலஹா சந்தி, பேராதனை, பல்கலைக்கழகம், தொலுவ, கம்பளை ஊடாக மீண்டும் நாவலப்பிட்டியவில் நிறைவடைந்தது.

இந்தப்போட்டியில் கம்பஹாவை சேர்ந்த கே.ஆர்.கே.சுரங்க முதலாமிடத்தையும் பொலநறுவையைச்சேர்ந்த ஆர்.மதுசிங்ஹ இரண்டாமிடத்தையும், புத்தளத்தைச் சேர்ந்த நிசான் லக்சல மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில்  120 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி நாவலப்பிட்டிய வைத்தியசாலை முன்றலில் ஆரம்பமாகி கம்பளைக்குச்சென்று மீண்டும் நாவலப்பிட்டியவில் நிறைவடைந்தது.
 
இந்தப்போட்டியில் அனுராதபுரத்தைச் சேர்ந்த ஏ.பி.நில்மினி முதலாமிடத்தையும் அனுராதபுரத்தினைச் சேர்ந்த மதுஷானி இரண்டாமிடத்தையும் கெக்கிராவையைச் சேர்ந்த எச்.ஏ.பி.ஐ.எம்.ரணசிங்க மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.  22ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாவலப்பிட்டியவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .