2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் ரசிகர்கள் வன்முறை: ஆட்டம் கைவிடப்பட்டது

Super User   / 2010 நவம்பர் 17 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி மானிப்பாய் இந்துக் கல்லூரி  மைதானத்தில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது ரசிகர்கள் மைதானத்தில் குழப்பம் ஏற்படுத்தியமையினால் ஆட்டம் இடையில் கைவிடப்பட்டது.

மின்னொளியில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் மோதிக்கொண்டன.

போட்டியின் மத்தியஸ்தராகக் கடமையாற்றியவரை இறுதி நிமிடத்தில் தாக்குவதற்;கு ஒரு குழுவினர் முயற்சித்த வேளையில் அதனை தடுக்க முயன்ற வீரர்கள் இருவர் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இதனைத் தொடர்ந்து போட்டி தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் இணைச் சம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.   
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .