2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கல்

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

ஸ்ரீலங்கா சோட்டோகாண் கராத்தே அமைப்பின் சம்மாந்துறைக் கிளையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கும் வைபவம் நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் எஸ்.ரி.ஏ.சலாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், விசேட அதிதியாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க, விளையாட்டு அதிகாரிகள், கராத்தே வீரர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--