2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

Kogilavani   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மூன்றாவது ஆண்டாக இடம் பெற்ற அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும்  நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்துள்ளன.

இப்போட்டிகளுக்கு இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள்  கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானங்களில் ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி,   பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி,   ஆண்கள் , பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெற்றன.

இவற்றைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில்  வட மாகாண கல்விப்பணிப்பாளர் பா.விக்கினேஸ்வரன் தலைமையில் தடகளப் போட்டிகள் ஆரம்பமாகின.

இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக பாரம்பரிய  மற்றும் சிறு கைத்தொழிலல்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா,  வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.எ.சந்திரஸ்ரீ  கல்வித் திணைக்கள அலுவலர்கள் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--