2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கோலூன்றிப் பாய்தல் சாதனை இரு வீரர்களால் முறியடிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு, பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையே  நடத்திய தடகள விளையாட்டுப் போட்டிகளில் 2002ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கோலூன்றிப் பாய்தல் சாதனையை இரு வீரர்கள் முறியடித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையேயான  கோலூன்றிப் பாய்தல்  போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

கடந்த 2002ஆம் ஆண்டு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாரினால் ஏற்படுத்தப்பட்ட 3.40 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து இந்த சாதனை பதியப்பட்டது. இதனை தற்போது பருத்தித்துறை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ரி.பாலகுமார் 3.55 மீற்றர் உயரம் பாய்ந்தும் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே.கணாதீபன் 3.65 மீற்றர் உயரம் பாய்ந்தும் இந்த சாதனையை முறியடித்துள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X