2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களின் விளையாட்டுத்திறனை வெளிக்கொணரத் திட்டம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத்துறை ஆற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் அகில இலங்கை கல்வி வலயங்களுக்கிடையே  குறிப்பிட்ட போட்டிகளுக்கான பயிற்றுனர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்களின் திறன்கள் வெளிக்கொண்டு வரப்படவேண்டுமென கல்வியமைச்சால் பணிக்கப்பட்டுள்ளது.

இதனொரு கட்டமாக வடமாகாண கல்வியமைச்சினால் உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு  பயிற்சிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆறு விளையாட்டுக்கள் தெரிவு செய்யப்பட்டு  மாணவர்களுக்கு  பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. மெய்வன்மை கால்பந்தாட்டம், றக்பீ, ஜீம்னாஸ்ரிக், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X