2021 மே 12, புதன்கிழமை

தேசிய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஹேவாவிதாரன வித்தியாலயம் சம்பியன்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

இலங்கை பாடசாலை கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் பாடசாலை கால்ப்பந்தாட்ட சங்கம் என்பன கூட்டாக ஏற்பாடு செய்த 15வயதிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தேசிய கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நிறைவுபெற்றது. போட்டிகளின் சம்பியனாக கொழும்பு ராஜகிரிய ஹேவாவிதாரன மகா வித்தியாலயம் தெரிவானது.

பெண்கள் பிரிவில் பொல்கஹாவெல சென் பெனடிக் மகா வித்தியாலயம் சம்பியனானது. இரண்டாம் இடத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மகாவித்தியாலயம் பெற்றுக்கொண்டது. மூன்றாம் இடத்தை அனுராதபுரம் கலன பிந்துனுவௌ தட்டிக்கொண்டது. இந்த போட்டிகளில் 42 அணிகள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .