2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தீக்குளிக்க முயன்ற நபர் வைத்தியசாலை அனுமதி

Janu   / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை (26) அன்று தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்துக்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற குறித்த நபரை பிரதேச மக்கள் விரைந்து செயல்பட்டு, காப்பாற்றி, நோயாளர் காவு வண்டியின் ஊடாக லிந்துலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

பி.கேதீஸ்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X