2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பலி

Janu   / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

லுணுவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்மோதர - போலவத்த பிரதான வீதியில் பெஸ்டஸ் பெரேரா மாவத்தை பகுதியில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹாவெவ, கொஸ்வாடிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சமிந்து சிஹார மாரசிங்க   எனும் நாத்தாண்டியா, தம்மிஸ்சர தேசிய பாடசாலையில் க.பொ. உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார் .

குறித்த மாணவன் சம்பவ தினத்தன்று லுணுவில பகுதியில் இருந்து பெஸ்டஸ் பெரேரா மாவத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த  மாணவனை  உடனடியாக மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் அந்த மாணவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் லுணுவில பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X