2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

காரை பந்தாடிய ரயில்: மூவர் படுகாயம்

Editorial   / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கொட, பியகம மர ஆலைக்கு அருகிலுள்ள ரயில் கடவையில் பெலியத்தவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் சனிக்கிழமை (27) அன்று மாலை ரயிலில் மோதியது.

 மாலை 4.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர்,  சிகிச்சைக்காக பலபிட்டிய அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பலபிட்டிய வெலிதராவில் வசிக்கும் கசுன் தனுஷ்க டி சில்வா (38), அவரது 11 வயது மகன் மற்றும் கொஸ்கொட மஹாபிட்டியவில் வசிக்கும் புஷ்ப பிரேமலதா டி சில்வா (59) ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆபத்தான நிலையில் உள்ள மோட்டார் வாகனத்தின் ஓட்டுநர் கசுன் தனுஷ்க டி சில்வா (38) காலியில் உள்ள கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை (28) காலை மாற்றப்பட்டதாக பலபிட்டிய மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுவரையிலான விசாரணைகளில், ரயில் கடவையில் பொருத்தப்பட்ட வண்ண சமிக்ஞைகளை கவனிக்காமல் மோட்டார் வாகனம் ஓட்டியதால் விபத்து நிகழ்ந்ததாக கொஸ்கொட பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X