Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரொமேஸ் மதுசங்க)
வட மாகாணத்தில் பாடசாலை ரீதியில் கிரிக்கெட் விளையாட்டினை விருத்தி செய்து அதிலிருந்து தெரிவு செய்யப்படும் வீரர்களை தேசிய மட்டத்தில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.
வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கான 300 இலட்சம் ரூபா பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர், 'கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் மலர்ந்துள்ளது. இந்த தருணத்தில் வட மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தமையை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இதேவேளை, வட மாகாணத்திலுள்ள இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்கப்படுத்தி அவர்களிடையேயான திறமையினை விருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பாடசாலைக் காலங்களிலிருந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது' என்றார்.
47 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
kuru Monday, 10 October 2011 09:25 PM
திறைமைசாலிகள் யாராக இருந்தாலும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
இது அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் அரிய சந்தற்பம். இதன்மூலம் இன ஒற்றுமையை பேணலாம். இல்லையேல் மக்கள் வெறுப்பை அரசு சந்திக்க நேரிடும்..
Reply : 0 0
Sanoon Mohideen Tuesday, 11 October 2011 03:49 AM
இதே போன்று கிழக்கு மாகாணத்திலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சிறப்பாய் இருக்குமே.....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago