2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தெற்காசியா விளையாட்டு விழாவில் மட்டக்களப்பிலிருந்து பங்குபற்றிய வீரர்களை வரவேற்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான முதலாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை தேசிய அணியின் சார்பாக கடற்கரை கால்பந்தாட்டப் போட்டி, கபடிப் போட்டி ஆகிய போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றியீட்டிய வீரர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இலங்கை கடற்கரை கால்பந்தாட்ட தேசிய அணியின் வீரர் ரெமோசன் செலர், சிரேஸ்ட மத்தியஸ்தர் அ.திவாகரன், கபடிப் போட்டி சார்பாக பங்குபற்றிய ராதாக்கிருஷ்ணன் சகிவன், கணேசராசா, சினோதரன் ஆகிய வீரர்கள் இதன்போது வரவேற்கப்பட்டனர்.

இவ்வரவேற்பு நிகழ்வை, மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கமும் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இவர்களை, மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட, மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம், மாகாண சபை உறுப்பினர் ரா.துரைரெட்ணம், மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் செ.ஈஸ்வரராசா, இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மதன் ஆகியோர் வரவேற்று வாகனத்தில் ஏற்றினர்.

திருமலை வீதி வழியாக சென்ற இவர்களை மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்றலில் நின்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், பிரதி முதல்வர் ஆ.ஜோர்ஜ்பிள்ளை, மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர கரவிட்ட, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரஞ்சித் வணராஜ உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் இணைந்து வரவேற்றனர்.

இதேவேளை,  இவர்களுக்கு மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் பாராட்டு விழாவும் இடம்பெற்றது.   இப் பாராட்டு விழாவில் வீரர்களின் பெற்றோர், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--