2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அரையிறுதி கரப்பந்தாட்ட போட்டியில் விளையாட ஆவரங்கால் மத்திவிளையாட்டுக்கழகம் தகுதி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகங்கள், யாழ்.மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி கரப்பந்தாட்ட போட்டியில் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகம் அரையிறுதி போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.

 

அமரார் ஜெகநாதன் ஞாபகார்த்தமாக இரண்டாவது ஆண்டாக இக்கரப்பந்தாட்ட போட்டி நடத்தப்படுகின்றது.

ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் காங்கேசன்துறை ஜக்கிய விளையாட்டுக் கழகமும் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

ஐந்து சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில் முதல் மூன்று சுற்றுக்களையும் முறையே 25:15, 25:22, 25:19 புள்ளிகள் என்ற அடிப்படையில் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று அறையிறுதிக்கு தகுதிபெற்றது.

மற்றுமொரு போட்டியில் அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.
இப்போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் 3:1 சுற்று என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

முதல் இரண்டு சுற்றுக்களை முறையே 15:17, 25:18 புள்ளிகள் என்ற அடிப்படையில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்ற போதிலும் மூன்றாவது சுற்றை தவறவிட்டது.

மூன்றாவது சுற்றில் அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக் கழகம் 26:24 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.

நான்காவுது சுற்றில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் 25:14 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றில் விளையாடத் தகுதி பெற்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .