Super User / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வட பிராந்திய அஞ்சல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட அஞ்சல் திணைக்கள ஊழியர்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் யாழ். மாவட்ட அணி சம்பியனானது.
137ஆவது அஞசல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரியாலை சனசமூக நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இறுதி போட்டியில் யாழ். அஞ்சல் அணி மற்றும் முல்லைத்தீவு அஞ்சல் அணி ஆகியன மோதிக்கொண்டன.
இப்போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய முல்லைத்தீவு அஞ்சல் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 29 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். அஞ்சல் அணி 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலகுவாக வட பிராந்திய சம்பியனானது.
இந்த கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.
33 minute ago
36 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
36 minute ago
37 minute ago
42 minute ago