Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகம் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கங்களுக்கிடையே அமரர் ஜெகநாதன் ஞாபகார்த்தமாக இரண்டாவது ஆண்டாக நடத்திய கரப்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகமும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகமும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
மல்லாகம் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று புதன்கிழமை இரவு அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.
காங்கேசன்துறை ஜக்கிய விளையாட்டுக்கழகமும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன. ஆவரங்கால் இந்து விளையாட்டுக்கழகம் 03க்கு 01 சுற்று என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. முதல் சுற்றை ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் 25க்கு 18 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற இரண்டாவது சுற்றை காங்கேசன்துறை ஜக்கிய விளையாட்டுக்கழகம் 25க்கு 22 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
மூன்றாம் நான்காம் சுற்றுக்களை இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன் இறுதி வரை போராடியபோதிலும் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் மூன்றாம் நான்காம் சுற்றுக்கள் முறையே 25க்கு 22, 25க்கு 20 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகமும் அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன. இரு அணிகளும் ஒரு அணி மற்றைய அணிக்குச் சளைத்தவர்கள் இல்லையென்பதை நிரூபிக்கும் வகையில் மோதிக்கொண்டாலும் மத்தி விளையாட்டுக்கழகம் தனது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. 5 சுற்றுக்கள் கொண்ட இந்தப் போட்டியில் முதல் மூன்று சுற்றுக்களை முறையே 25க்கு 17, 26க்கு 24, 25க்கு 13 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
5 minute ago
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
26 minute ago
35 minute ago