2021 ஜனவரி 16, சனிக்கிழமை

யாழ். இந்துக் கல்லூரி வீரன் அவுஸ்திரேலியா பயணம்

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகர், அல்பேர்ட் பார்க்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தடகளப் போட்டியில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரன் நேற்று அவுஸ்திரேலியா பயணமானார்.

தேசிய மட்ட கனிஷ்ட பிரிவு மெய்வன்மைப் போட்டியில் 16 வயதுப் பிரிவினருக்கான உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனையை செந்தூரன் நிகழ்த்தியிருந்தார்.

இந்தச் சாதனை நிலைநாட்டியதன் மூலம் செந்தூரன் அவுஸ்திரேலியா செல்லும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியானது ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலிய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இவருடன் இணைந்து 8 இலங்கை வீரர்கள் தடகளப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக அவுஸ்திரேலியா பயணமாகியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .