2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

உக்ரைன் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

Freelancer   / 2025 டிசெம்பர் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா முன்னெடுத்த பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களால், உக்ரைன் முழுவதும் மின்சார விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
 
கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு ரஷ்யா இந்தத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட ஒடெசா, ரிவ்னே, டெர்னோபில் மற்றும் க்மெல்னிட்ஸ்கி ஆகிய மாகாணங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.
 
சுமார் 600 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் பல ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
 
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மின்சாரக் கட்டமைப்பிற்கு மேலதிக சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், மின்சாரத் தேவையைச் சமநிலைப்படுத்தவும் நாடு முழுவதும் அவசர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 
குறிப்பாக மேற்கு யுக்ரைனில் உள்ள பல நகரங்கள் முற்றிலும் இருளில் மூழ்கியுள்ளன.
 
இந்நிலையில், பாதுகாப்புச் சூழல் சீரடைந்தவுடன் உடனடியாகப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என உக்ரைனிய மின்சார சபை தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X