Freelancer / 2025 டிசெம்பர் 24 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய போர்க் கப்பல் கட்டுமானத் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தக் கப்பல்களுக்கு தனது பெயரையும் சூட்டியுள்ளார். ‘ட்ரம்ப் க்ளாஸ்’ கப்பல்கள் என்று இவை அழைக்கப்படும். இந்த வகை போர்க் கப்பல்கள் கொண்ட படை ‘கோலட்ன் ஃப்ளீட்’ எனப்படும் என்று பெருமிதத்தோடு ட்ரம்ப் அறிவித்தார்.
பொதுவாக அமெரிக்க ஜனாதிபதிகள் வரலாற்றில் அவர்கள் பணிக்காலத்தில் நாட்டின் போர்க் கப்பலுக்கு அவர்களின் பெயர் சூட்டப்படுவதில்லை. அதிலிருந்து தனக்கு விதிவிலக்கு கொடுத்துக் கொண்டு அவற்றுக்கு சொந்த நாமகரணம் செய்துள்ளார் ட்ரம்ப்.
மேலும், அவர் ‘ட்ரம்ப் க்ளாஸ்’ போர்க் கப்பல்களை அறிவித்தபோது அவருக்கு இருபுறமும் அந்தக் கப்பலின் மாதிரி தோற்றம் கொண்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை ‘ட்ரம்ப் க்ளாஸ்’ போர்க் கப்பல்களின் பிரம்மாண்டத்தை உணர்த்துவதாக இருந்தன.
இந்தக் கப்பல் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தொன் வரை எடை கொண்டிருக்கும். அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய போர்க் கப்பலாக இருக்கும். இதில் சாதாரண ஏவுகணைகள் தொடங்கி லேசர், ஹைபர்சோனிக், தொலைதூர ஏவுகணைகள் வரை அனைத்தும் இருக்கும். மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் இருக்கும். அணு ஆயுதங்களும் கூட இருக்கும். இந்தக் கப்பல் கட்டி முடிக்கப்படுவதற்குள் இப்போது ஆய்வில் இருக்கும் இன்னும் பல நவீன ஆயுதங்களும் இணைக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.
இந்த பிரம்மாண்ட கப்பல் பற்றி ட்ரம்ப் ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாளிகையில் இருந்து பேட்டி கொடுத்தார். அப்போது ட்ரம்ப்புடன் பென்டகன் இராணுவத் தலைமையகத்தின் தலைவர் பீட் ஹெக்ஸத் இருந்தார். கூடவே வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, கடற்படை செயலர் ஜான் ஃபீலன் இருந்தனர். (a)

1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago