2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

தேசிய கபடி அணியில் இடம்பிடித்த இரு வீரர்களுக்கு வரவேற்பு

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)

ஆசிய நாடுகளுக்கிடையிலான கபடி போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த மட்டக்களப்பு மாவட்ட வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த டி.மதன்சிங், டி.மதன் ஆகிய இருவருமே இவ்வாறு வரவேற்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கபடி சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு எல்லை வீதி, கூழாவடி கிராம மக்கள் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.

மேற்படி இருவீரர்களையும் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயர் எஸ்.ஜோர்ஜ் பிள்ளை, மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் வரவேற்றனர்.

இதையடுத்து இவ் விரர்கள் ஊர்வலமாக மட்டக்களப்பு நகர் உட்பட மட்டக்களப்பு மாநகரம் எங்கும் அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, ஆசிய கபடி போட்டியில் இலங்கை மூன்றாமிடத்தை பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .