2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

வவுனியா மற்றும் யாழ். மாவட்ட மேசைப் பந்தாட்டப்போட்டி

A.P.Mathan   / 2012 நவம்பர் 11 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா பிரதேச செயலகமும் இலங்கை மேசைப்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து நடத்திய மேசைப் பந்தாட்டப்போட்டி நேற்று சனிக்கிழமை வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கமலன் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் வவுனியா மாவட்ட அணிகளுக்கிடையிலும் யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலும் தனித்தனியான போட்டிகள் இடம்பெற்றிருந்ததுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை மாகாணமட்டப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் அ.சிவபாலசுந்தரன், இலங்கை மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் சந்தன பெரேரா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .