2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 நவம்பர் 12 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

கிழக்கு மாகாண சபையின் பி.எஸ்.டி.ஜி நிதியொதுக்கீட்டில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், உட்பட பலர் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை கையளித்தனர்.

இந்த திட்டத்தில் சுமார் 16 விளையாட்டு கழகங்களுக்கு உபகரனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .