2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

சர்வதேச ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு இலங்கைக்கும் யாழ்.இந்துக கல்லூரிக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் மூவருக்கு யாழில் இன்று அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்ற யாழ்.இந்துக்கல்லூரி மாணவனான  இரத்தினசிங்கம் செந்தூரன் இதன்போது பாடசாலை சமூகத்தினரால் வரவேற்கப்பட்டார்.

இவர், தேசிய கனிஷ்ட பிரிவு உயரம் பாய்தலில் பங்குபற்றி வெள்ளிப்பதக்கம் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து, செந்தூரன் இரண்டாமிடத்தைப்பெற்று இலங்கைக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் நடைபெற்ற கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற இரண்டு மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .