2021 ஜனவரி 23, சனிக்கிழமை

செல்வபுரம் சந்திரன் விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)

முல்லைத்தீவு இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் செல்வபுரம் சந்திரன் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

முல்லைத்தீவு இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை அலம்பில் விளையாட்டு மைதானத்தில் நடத்தி வந்தது. இந்நிலையில், அலம்பில் விளையாட்டு மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் செல்வபுரம் சந்திரன் விளையாட்டுக்கழக அணியும் சிலாவத்தை இளம் பறவையன் விளையாட்டுக்கழக அணியும் மோதின.

போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் இளம்பறவையன் அணி முதல் கோலினைப் போட்டது. முதல் பாதி ஆட்டத்தில் 1 : 0 என்ற கோல் கணக்கில் இளம்பறவையன் அணி முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் சந்திரன் விளையாட்டுக்கழக அணி பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைக்க அதனை கோலாக்கியது. ஆட்டம் முடியும்வரையும் இரு அணிகளும் தலா ஒரு கோலினைப் பெற்றிருந்ததினால், ஆட்டம் சமநிலை தவிர்ப்பு உதையினை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் செல்வபுரம் சந்திரன் விளையாட்டுக்கழகம் 4 : 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.

சுற்றுப்போட்டியின் சிறந்த வீரராக சந்திரன் விளையாட்டுக்கழக அணியினைச் சேர்ந்த கே.நிசாந்தன் தெரிவானார்.

வெற்றிபெற்ற அணிக்கும் வீரர்களுக்குமான பரிசில்களை பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி பிரிகேடியர் மார்க், முல்லைத்தீவு மாவட்;ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் ஆகியோர் வழங்கினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .