2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

'யாழ்ப்பாணத்தின் சமர்' போட்டி முடிவுகள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
 
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் யாழ். கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ். மாவட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் அணிக்கு 7 பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நடத்தி வருகின்றது.
 
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 64 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் 3 சுற்றுக்கள் விலகல் முறையில் நடைபெற்று தற்போது 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
 
மேற்படி 8 அணிகளுக்குமிடையில் நான்காம் சுற்றுப் போட்டிகள் லீக் முறையில் நேற்று சனிக்கிழமை (26) முதல் நடைபெற்று வருகின்றன.
 
நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் யாழ். றெட் றேஞ்சர்ஸ் அணியினை எதிர்த்து இளவாலை ஹென்றிஸ் அணி மோதியது. இப்போட்டியில் இளவாலை ஹென்றிஸ் அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
 
இரண்டாவது போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் அணியினை எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஷ் அணி மோதியது. இப்போட்டியில் ஞானமுருகன் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--