2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அக்கரைப்பற்று பிரதேச செயலக அணி வெற்றி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


சாய்ந்தமருது பிரதேச செயலக அணிக்கும் அக்கரைப்பற்று பிரதேச செயலக அணிக்குமிடையே நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச செயலக அணி வெற்றி பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு 11 பேர் கொண்ட 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இரு சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டிகள் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்றது.

இரு போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரதேச செயலக அணி முதல் போட்டியில் 13 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களையும், இரண்டாம் போட்டியில் 11 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 66 ஓட்டங்களையும் பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக அணி சார்பாக எம்.எஸ்.இம்ரான் முதல் போட்டியில் 35 ஓட்டங்களையும், இரண்டாம் போட்டியில் எம்.எம்.சிபான் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று பிரதேச செயலக அணி இரு தொடர்களிலும் வெற்றிபெற்றது.

முதல் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச செயலக அணி 14.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டினால் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியின் 11 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 68 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டினால் வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டி நிகழ்வுக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.றசான், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--