2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மன்னாரில் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சித்திரைப் புத்தாண்டையொட்டி மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் அரச திணைக்களங்கள் இணைந்து ஏற்பாடு செய்த புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை (05) மன்னார் முருங்கன் மகாவித்தியாலய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றன.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் ஆரம்ப நிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.

இதனை தொடர்ந்து முட்டி உடைத்தல், கிறீஸ் மரம் ஏறுதல், பணிஸ் சாப்பிடுதல், தலையணைச் சமர், கரண்டி ஓட்டம், கபடி (ஆண், பெண்) போட்டி, மர்ம மனிதனை கண்டுபிடித்தல், யானைக்கு கண் வைத்தல், கயிறு இழுத்தல் (ஆண்கள் பிரிவு), கயிறு இழுத்தல் (பெண்கள் பிரிவு), தேங்காய் துருவுதல், விநோத உடைப் போட்டி, அழகுராணிப் போட்டி, சங்கீதக் கதிரை ஆகியவற்றுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதேவேளை, மாட்டு வண்டிச் சவாரி கறுக்காக்குளத்தில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்வில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்டான்லி டி மெல், மன்னார் மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.பரமதாஸ், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .