2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வின் ஈஸ்டன் சலர்ஜஸ் வெற்றி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்.

வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக் கழகம் சஜ்ஜாத் நினைவுக் கிண்ண கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (06) அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து 24 கழகங்கள் கலந்து கொண்ட இருபது இருபது கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக் கழகமும் வந்தாறுமூலை வின் ஈஸ்டன் சலர்ஜஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வந்தாறுமூலை வின் ஈஸ்டன் சலர்ஜஸ் விளையாட்டுக் கழகம் இருபது பந்துப்பரிமார்றங்கள் முடிவில் 124 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது அதனை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக் கழகம் 18.2 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் சகல இழக்குகளையும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது 19 மேலதிக ஒட்டங்களால் வந்தாறுமூலை வின் ஈஸ்டன் சலர்ஜஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டிக் கொண்டது.

தொடரின் நாயகனாக ஓட்டமாவடி ரேஜஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எம்.றிபாசும், சிறந்த துடுப்பாட்ட வீரராக ஓட்டமாவடி யங் சோர்ஜஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எம்.ஐ.ஆஷாத்தும் சிறந்த பந்து வீச்சாளராக வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எச்.எம்.பஸ்மியும் தெரிவு செய்யப்பட்டனர்.

சஜ்ஜாத் நினைவுச் கிண்ண பரிசளிப்பு நிகழ்வு அல் அக்ஷா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல்.எம். லியாப்தீன் தலைமையில் இடம் பெற்றபோது பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.அஷ்ரப், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்ஸதீன் வஸ்ஸான் ஆகியோர் கலந்து கொண்டு நினைவுக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .