2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தமிழ் -சிங்களப் புதுவருட சிறப்பு விளையாட்டு விழா

Super User   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


தமிழ் சிங்களப் புதுவருடத்தினை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகமும், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து நடத்திய பிரதேச மட்ட விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை (08) வாகரை வம்மிவட்டுவான் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக, பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் வி.நவிரதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன், வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித ஜெயரத்ன, பதில் பொறுப்பதிகாரி ரிஜெயசீலன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் விளையாட்டு விழாவில் காலை ஆண்பெண் இருபாலாருக்குமன மரதன், சைக்கிள் ஓட்டம் ஆகியன நடைபெற்றன. அதனையடுத்து, மாலை நிகழ்வுகளாக கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டி வம்மிவட்டுவான் வான்மதி விiயாட்டுக் கழகம், கதிரவெளி பிரன்ஸ் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கிடையில் நடைபெற்றது. அத்துடன், கிரிக்கட் போட்டி வாகரைப்பிரதேச செயலக உத்தியேகத்தர்களின் அணிகளுக்கிடையில் நடைபெற்றன, கலாச்சார விளையாட்டு வரிசையில் முட்டி உடைத்தல், விசேட தேவையுடையேருக்கான ஓட்டப் போட்டி, சிறுவர்களுக்கான மிட்டாய் பொறுக்குதல் என்பனவு நடைபெற்றன.

இறுதி நிகழ்வான பரிசு வழங்கலின் போது, ஏற்கனவே நடத்தபடபட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--