2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

தமிழ், சிங்கள புது வருட விளையாட்டு போட்டி

Super User   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் காசிம் வீதியில் அமைந்துள்ள அல்  முஹ்பாத் முன் பள்ளியின் வருடாந்த தமிழ், சிங்கள புது வருட விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை (12) புத்தளம் நகர மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.

ஏனைய மத சகோதரர்களை மதித்து அவர்களுடைய விசேட தினத்தை அனுஷ்டிக்கும் தோரணையில் இரண்டாவது முறையாகவும் இந்த புது வருட விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முன்பள்ளி பணிப்பாளர்  லரீபா சுஹைல் தலைமையில் நடைபெற்ற போட்டிகளில் நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் ரோஸ்  இல்லங்களை  சேர்ந்த 95 முன்பள்ளி மாணவர்கள் போட்டியிட்டனர். நான்கு இல்லங்களையும் முறையே ஏ.எப்.நஸ்லிபா, பிரபாசினி. எப்.ரிஸ்தத், வனிதா ஆகியோர் வழி நடத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. நடுவர்களாக திருமதி ரூசி சனூன், நிஹ்லா நிஜாம், திருமதி பர்சானா சிஹாப் மற்றும் திருமதி கேர்லி பெரேரா ஆகியோர் கடமையாற்றினர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--