2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

நியூ பிரண்ட்ஸ் அணி சம்பியன்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் நடாத்திய நியூ ஸ்டார்ஸ் வெற்றிக்கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்ட தொடரில் புத்தளம் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணி பலம் வாய்ந்த விம்பிள்டன் அணியை வீழ்த்தி சம்பியனாகியுள்ளதோடு வெற்றிக்கிண்ணத்தையும் தனதாக்கி கொண்டுள்ளது.
இறுதி ஆட்டம் மாலை புத்தளம் சாகிறா கல்லூரி மைதானத்தில் ; வெள்ளிக்கிழமை (18)இடம்பெற்றது.

போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் போட முடியாமல் போனதால் வெற்றியை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற பெனால்டி உதையில் 04 : 03 கோல்களினால் நியூ பிரண்ட்ஸ் அணி  வெற்றி   பெற்று சம்பியனானது.

இறுதிப்போட்டியில் புத்தளம் லீக் தலைவர் எச்.எம்.சபீக், செயலாளர் ஜே.எம்.ஜௌசி உள்ளிட்ட அனுசரணை அணியான நியூ ஸ்டார்ஸ் கழக மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். சம்பியன் அணியான நியூ பிரண்ட்ஸ் அணியினருக்கு 10 ஆயிரம்  ரூபா ரொக்கப்பணமும், ரனரப்  அணியான விம்பிள்டன் அணியினருக்கு 05 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சிறந்த  கோல் காப்பாளர், சிறந்த வீரர்கள் உள்ளிட்ட அனைத்து நடுவர்களுக்கும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. நியூ ஸ்டார்ஸ் அணிக்காக நீண்ட  காலம் உதவிகள் நல்கி வரும் தொழிலதிபர் டீ .எம் கியாஸ் மூத்த வீரர்களால் நினவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ.எம்.கியாஸ், எம்.எஸ்.எம்.நௌபி, எம்.எம்.சிபான் ஆகியோர் கடமையாற்றினார்.       
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--