2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பொற்பதி இந்து விளையாட்டுக்கழக அணி சம்பியன்

Super User   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


சுதுமலை சிந்மயபாரதி விளையாட்டுக் கழகம் யாழ்.மாவட்ட மென்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய அணிக்கு 7 பேர் 8 பந்துபரிமாற்றங்கள் கொண்ட சுற்றுப்போட்டியில் பொற்பதி இந்து அணி சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டி சனிக்கிழமை (19) கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் பொற்பதி இந்து அணியினை எதிர்த்து கொக்குவில் ஆர்.பி..விளையாட்டுக்கழகம் மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பொற்பதி இந்து அணி 7.4 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 61 என்ற வெற்றியிலக்கினை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொக்குவில் ஆர்.பி. அணி 21 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனும், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணி மற்றும் வீரர்களுக்கான பரிசில்களையும் வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கினார்கள்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--