2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

விளையாட்டுக்கழக சம்பியனாக கல்முனை சனிமௌன்ட் கழகம் தெரிவு

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனை பிரதேச விளையாட்டுக் கழக சம்பியனாக கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு .டையிலான விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(20) கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேசதில் உள்ள 47 விளையாட்டுக்கழகம் பங்குபற்றிய இப்போட்டியில் 119 புள்ளிகளை பெற்று கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் பிரதேச விளையாட்டுக்கழக சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

கல்முனைபிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ.எம்.றஸீனின் இணைப்பில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.ஹரீஸ், கல்முனை பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.எம்.ஹுசைன்தீன், அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட பயிற்சியாளர் எம்.ஐ.அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X