2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மாத்தளை மாணவ, மாணவர்களின் திறமைகள் பிரகாசிப்பு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 15 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரிட்ஸ்பரி தேசிய ஹொக்கி போட்டி கடந்த 27ஆம் திகதி ரிட்ஸ்பரி அனுசரணையுடன் மாத்தளை டேவிட் எட்வர்ட் பார்க்கில் இடம்பெற்றது. ஹொக்கி விளையாட்டினை மீண்டும் நாடுபூராகவும் கட்டியெழுப்பும் நோக்கில் மாத்தளை புனித.தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ரிட்ஸ்பரியுடன் இணைந்து இந்த போட்டியை ஒழுங்கு செய்திருந்தது.
 
ஹொக்கி விளையாட்டிற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் குறிக்கோளுடன் இந்த மாபெரும் காரியத்திற்கு அனுசரணை வழங்கி இந் நிகழ்வின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய ரிட்ஸ்பரிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்' என மாத்தளை புனித.தோமஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எரிக் ஹுலங்கமுவ தெரிவித்தார்.
 
வென்னப்புவ புனித.தோமஸ் கல்லூரியை 2:1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்ற மாத்தளை விஜய வித்தியாலயமும், 5:1 என்ற கோல் கணக்கில் கல்கிசை புனித.தோமஸ் கல்லூரியை வீழ்த்திய மாத்தளை கிருஸ்துதேவ வித்தியாலயமும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன. இறுதிப்போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் மாத்தளை விஜய வித்தியாலயம் மற்றும் மாத்தளை கிருஸ்துதேவ வித்தியாலயம் ஆகிய இரு அணியினரும் சம சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டனர். மூன்றாமிடத்திற்கு நடத்தப்பட்ட போட்டியில் கல்கிசை புனித.தோமஸ் கல்லூரியை வீழ்த்தி மாத்தளை கிருஸ்துதேவ வித்தியாலயம் வெற்றி பெற்றது. மாத்தளை விஜய வித்தியாலயத்தை சேர்ந்த கிஹான் சங்கீத் அமரசிங்க மற்றும் மாத்தளை கிருஸ்துதேவ வித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.எஸ்.சந்திரசேன ஆகியோர் போட்டியின் ஆட்ட நாயகன்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
 
இப் போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த றோயல், ஆனந்தா, வெஸ்லி, டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் கல்கிசை புனித.தோமஸ் கல்லூரிகளும், கண்டியைச் சேர்ந்த மாத்தளை புனித.தோமஸ் கல்லூரி, தர்மராஜ, திரித்துவக் கல்லூரி, புனித.சில்வெஸ்டர், கிருஸ்துதேவ மற்றும் சாஹிரா கல்லூரிகளும், யாழ்ப்பாண வித்தியாலயம், காலி புனித.அலோசியஸ், வென்னப்புவ ஜோசப் வாஸ், நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா, கம்பளை பண்டாரநாயக்க மற்றும் பதுளை தர்மதூத வித்தியாலயம் ஆகியன பங்குபற்றியிருந்தன.
 
பாடசாலை ரீதியில் ஹொக்கி விளையாட்டினை மீண்டும் கட்டியெழுப்பி திறமைசாலிகளை தேசிய மட்டத்திற்கு உயர்த்தும் குறிக்கோளுடனே 'ரிட்ஸ்பரி' இந்த போட்டிக்கு தனது அனுசரணையை வழங்கியிருந்தது. இந்த போட்டியின் ஊடாக தேசிய அணி சார்பாக போட்டியிடக்கூடிய விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்' என CBL நிறுவனத்தின் விற்பனை பிரிவின் முகாமையாளர் தேஜா பீரிஸ் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .