2021 மே 08, சனிக்கிழமை

அரையிறுதி போட்டிகள் நாளை ஆரம்பம்

George   / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்


சென்.மைக்கல் விளையாட்டுக்கழகம் நடத்தி வரும் அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (01) முதல் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பெப்ரவரி 1ஆம் திகதி நடைபெறும் முதலாவது அரையிறுதியாட்டத்தில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணி மோதுகின்றது. 

தொடர்ந்து பெப்ரவரி 3ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதுகின்றது.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த 30 அணிகள் பங்குபற்றிய இந்தச் சுற்றுப்போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X