2021 மே 10, திங்கட்கிழமை

கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்


ஊருக்கு ஒரு வேலை திட்டம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கல்பிட்டி வீதி நுரைச்சோலை இலந்தையடியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட்டு கரப்பந்தாட்ட வீரர்களின் பாவனைக்கு புதன்கிழமை (04) மாலை கையளிக்கப்பட்டது.


கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ்  மேற்கொண்ட முயற்சியின் பலனாக 14 இலட்சம் ரூபாய் செலவில் இந்த கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.


நுரைச்சோலை, கொய்யாவாடி, இலந்தையடி பிரதேசங்களில் செயல்படும் கரப்பந்தாட்ட கழகங்களின் வேண்டுகோளின் பேரில் இந்த கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டதாக தெரிவித்த கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ், அரசாங்கத்தினால் ஒதுக்கித்தரப்பட்ட காணியில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மைதானத்துக்கான மின் இணைப்பை வழங்குவதற்கு சம்பத்தப்பட்டவர்கள் முன்வரவேண்டுமெனவும் தெரிவித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X