2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சம்பியன்களாக திரித்துவ கல்லூரி

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மானெல் மொனராவெல ராஜபக்ஷ தொடருக்காக இடம்பெற்ற 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆறு ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட் கிரிக்கெட் தொடரில், கண்டி திரித்துவ கல்லூரி அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியை வெற்றிகொண்டெ, அவ்வணி வெற்றிகொண்டது.


கண்டி ஈகோல் சர்வதேசப் பாடசாலையின் 25ஆம் ஆண்டு நிறைவையொட்டி, இந்தத் தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போதிய வெளிச்சமின்மை காரணமாக, இறுதிப் போட்டியானது 4 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு இடம்பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய திரித்துவ கல்லூரி, 4 ஓவர்களில் 52 ஓட்டங்களைப் பெற்றது. இதில் 42 ஓட்டங்கள், சங்கீத் ஷண்முதநாதனால் மாத்திரம் குவிக்கப்பட்டிருந்தன.

பதிலளித்தாடிய கிங்ஸ்வூட்ஸ் கல்லூரி அணியால், 4 ஓவர்கள் நிறைவில் 28 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இத்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தர்மராஜ கல்லூரியின் பவந்த உதங்கமுவவும் சிறந்த துடுப்பாட்ட வீரராக கிங்ஸ்வூட் கல்லூரியின் கனிது கம்புருகமுவவும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .