Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

றோயல் விளையாட்டுத் தொகுதியில் இப்போட்டி இடம்பெற்றிருந்தது.
ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்த சென். தோமஸ் கல்லூரி அணி, 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. எனினும், சென். தோமஸ் அணியின் தவறுகளை திரித்துவ கல்லூரி அணி பயன்படுத்திக் கொண்டது.
தொடர்ச்சியாக 10 புள்ளிகளைப் பெற்ற திரித்துவ கல்லூரி அணி, சென். தோமஸ் அணிக்கு எந்தவித புள்ளிகளையும் விட்டுக் கொடுத்திருக்கவில்லை.
இதனடிப்படையில், 10-5 என்ற புள்ளிகள் கணக்கில் திரித்துவ கல்லூரி அணி சம்பியனானது.
இத்தொடருக்கான ஷீல்ட் சம்பியன்களாக பிலியந்தல மத்திய கல்லூரியை 33-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய நுகேகொட சென். ஜோன்ஸ் கல்லூரி தெரிவானது.
இத்தொடரின் “பொவ்ள்” சம்பியன்களாக, தர்மராஜ கல்லூரியை 10-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய வெஸ்லி கல்லூரி அணி தெரிவானதோடு, றோயல் கல்லூரியை 17-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய கிங்ஸ்வூட் கல்லூரி அணி “பிளேட்” சம்பியன்களாகவும் தெரிவாகின.
இலங்கை பாடசாலைகள் றக்பிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்தொடரில், 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025